Categories
உலக செய்திகள்

இந்தியா-ஜப்பான் இடையிலான…. 6-வது கடல்சார் பயிற்சி…. பிரியாவிடை கொடுத்தது….!!

ஜப்பான்- இந்தியா இடையிலான ஆறாவது கடல்சார் பயிற்சி 2022, இந்தியக் கடற்படையால் வங்கக் கடலில் நடைபெற்றுள்ளது.

ஜப்பான்- இந்தியா இடையிலான ஆறாவது கடல்சார் பயிற்சி 2022, இந்தியக் கடற்படையால் நடத்தப்பட்ட ஜிமெக்ஸ் 22, வங்கக் கடலில் செப்டம்பர் மாதம் 17 அன்று வழக்கமான மரபுப்படி இரு தரப்பும் பரஸ்பரம் பிரியாவிடை கொடுத்து முடிவுக்கு வந்துள்ளது. ரியர் அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையிலான இந்திய கடற்படைக் கப்பல்கள், கிழக்கு கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (ஜேஎம்எஸ்டிஎஃப்) ஃபிளாக் ஆபிசர் கமாண்டிங் ரியர் அட்மிரல் ஹிராடா தோஷியுகி தலைமையிலான இசுமோ மற்றும் டகானாமி கப்பல்கள், ஒரு வார கால பயிற்சியில் பங்கேற்றன.

ஜிமெக்ஸ் 22 இரண்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொண்ட சில முக்கிய பயிற்சிகளைக் கண்டது. இரு தரப்பும் மேம்பட்ட நிலை நீர்மூழ்கி எதிர்ப்புப் போர், ஆயுதத் துப்பாக்கிச் சூடு மற்றும் வான் பாதுகாப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இந்தப் பயிற்சியில் கப்பலில் செல்லும் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்றன. கடந்த 2012 இல் தொடங்கப்பட்ட ஜிமெக்ஸ் -இன் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த பயிற்சி, இரு கடற்படைகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் மற்றும் இயங்குதன்மையை ஒருங்கிணைத்தது

Categories

Tech |