Categories
தேசிய செய்திகள்

இந்தியா – ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து – மத்திய அரசு…!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடன் உதவியுடன் மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஆர்டிஐ தகவல் மூலமாக தெரியவந்துள்ளது.

தென்காசியை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் மத்திய சுகாதாரத்துறையிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஆர்டிஐ மூலமாக தகவல்களை கோரியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடன் உதவியுடன் மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறியுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் அரசுகளுக்கிடையே கடும் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையெழுத்தான ஒப்பந்தம் கிடைத்த பின்னரே பிற விவரங்களை அளிக்க முடியும் என்றும் சுகாதாரத் துறை கூறியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் இன்னமும் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

எதிர்க்கட்சிகள் மத்தியில் இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதே போன்று ஆர்.டி.ஐ மனுவுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை ஜப்பான் பன்னாட்டு நிதி முகமை கடன் அளிக்க ஒப்புதல் கொடுத்த பின்னரே மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Categories

Tech |