பந்து வீசுவதற்கு மிகவும் கடினமான வீரர் இவர்கள் தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளர் சதாப் கான் தெரிவித்துள்ளார்..
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளராக இருப்பவர் சதாப் கான் (23).. சுழற்பந்து வீச்சாளரான இவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார்.. நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் கூட சிறப்பாக பந்து வீசி இருந்தார்.. இந்த நிலையில் சதாப் கான் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.. ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் இவர் பதில் அளித்து வந்தார்..
அப்போது ரசிகர் ஒருவர் பந்து வீசுவதற்கு மிகவும் கடினமான பேட்ஸ்மேன் யார்? என்று கேள்வி எழுப்பினார்.. இதற்கு பதிலளித்த அவர் பந்து வீசுவதற்கு மிகவும் கடினமான வீரர் யார் என்றால், இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் என்று கூறினார். இவரது இந்த பதில் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகின்றது..
Rohit Sharma and Warner #AskShadab https://t.co/qZLJCdJyae
— Shadab Khan (@76Shadabkhan) December 20, 2021