Categories
உலக செய்திகள்

“இந்தியா தனது முடிவை மாற்றி அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்”….பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேச்சு….!!!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்பியதாகவும், ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தடையாக அமைந்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள அவரது இல்லத்தில் வெளிநாட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய போது, என்னுடைய 3 1/2 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவுடனான  உறவை நான் மேம்படுத்த விரும்பினேன்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும் ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஒரு தடையாக அமைந்தது. மேலும் அப்போதைய ராணுவ தளபதி ஜெனரல் கமல் ஜாவேத் பஜ்வா, இந்தியாவுடனான சிறந்த உறவை வைத்துக்கொள்ள அதிகமாக விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் கடந்த 2019 -ஆம் வருடம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா  ரத்து செய்த பின் இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தனது அரசாங்கம் வலியுறுத்தவில்லை.

தனது முடிவை மாற்றிக் கொண்டு இந்தியா அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். வலதுசாரி கட்சியை சேர்ந்த ஒரு தலைவரால் மோதலை தீர்மானிக்க முடியும் என நான் இன்னும் நம்புகிறேன். பிரதமர் மோடி வலதுசாரி கட்சியில் இருந்தவர். அதனால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்து காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என நான் விரும்பினேன். கடந்த ஏழு மாதங்களில் எங்கள் மீது பயங்கர அதிகாரத்தை ஜெனரல் பஜ்வா கட்டவிழ்த்து விட்டார். மேலும் நாட்டின் பொருளாதாரப் பேரழிவுக்கு ஜெனரல் பஜ்வாவும் பொறுப்பு.

ஏனென்றால் நாங்கள் பொருளாதார முன்னணியில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் எனது அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கு ஜெனரல் பஜ்வா முக்கிய காரணமாக இருந்தார். அவர் திருடர்களான ஷெரிப் மற்றும் சர்தாரிகளுக்கு ஆதரவாக செயல்பட விரும்பியதால் தான் அவர் எனது அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்துள்ளார். மேலும் நீதித்துறை கமிஷன் மூலம் சைபர் விசாரணை மூலம் அமெரிக்காவின் பங்கு தீர்மானிக்கப்பட வேண்டும்.

தற்போது ஆப்கானிஸ்தான் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பது தலைமை பொறுப்பில் உள்ள யாருக்கும் தெரியாது. ஆனால் ஆப்கானிஸ்தானுடன் மோதலை பாகிஸ்தான் ஏற்க முடியாது. நமது வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி  உலகம் முழுவதும் சுற்றி திரிவதை விடுத்து ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டும். ஏனென்றால் இது மிகவும் தீவிரமான விஷயம் என கூறியுள்ளார்.

Categories

Tech |