இந்தியா – அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்பதாக அதிபர் ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார்.
டிரம்ப்பின் இந்திய வருகை பல்வேறு உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது. இரு நாடுகள் குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா குறித்த தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
அதில் , அதிக இறக்குமதி வரிகள் பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு இந்தியா நெருக்கடி தந்து வருகிறது உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது எனக்கு மோடியை மிகவும் பிடித்தாலும் இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக சிறிய அளவில் பேச வேண்டியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.