Categories
உலக செய்திகள்

இந்தியா-நேபாளம் இடையில்…. மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியா நேபாளம் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. வட மேற்கு வங்காள மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான என்ன பேருந்து சேவை தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நகரத்தில் உள்ள டென்சிங் நோர்கே டெர்மினஸில் பேருந்து டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. இந்த டிக்கெட் விலை ரூ.1500 ஆகும். இந்த பேருந்தில் 40 இருக்கைகள் கொண்டு சிலிகுரியில் இருந்து திங்கள் முதல் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகின்றனமேலும் மாலை 3 மணிக்கு இந்தப் பேருந்து புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வாழ்வாதாரத்திற்காக சிலிகுரி, டார்ஜிலிங் மற்றும் அண்டை நாடான சிக்கிம் ஆகிய இடங்களுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான நேபாள மக்களுக்கு இந்த சேவை பெரிது பயனளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இப்பகுதியில் சுற்றுலா சேவைகளை மேம்படுத்த உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மேற்கு வங்க மாநில சிலிகுரியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு வரை 615 கி.மீ பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |