Categories
உலக செய்திகள்

இந்தியா, பாகிஸ்தான்: அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருது…. வெளியான தகவல்….!!!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை விரிவுபடுத்தி வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி) அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பு, வருடந்தோறும் அணுஆயுத நிலவரம் குறித்து தகவல்களை திரட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை அண்மையில் வெளியாகியது. அதில் இருப்பதாவது “அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா போன்ற 9 நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது. உலகளவில் ரஷ்யா 6 ஆயிரத்துக்கும் அதிகமான அணு ஆயுதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. அத்துடன் அமெரிக்கா 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணுஆயுதங்களை வைத்திருக்கிறது. இந்த இருநாடுகளும் உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 90 சதவீதத்தை வைத்துள்ளது. சீனா தன் அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி வருகிறது.

நிலம் மற்றும் கடலிலிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகள், அணுஆயுதங்களை தாங்கிச் செல்லும் விமானம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது. எனினும் தன் படை எண்ணிக்கை எதிர்கால திட்டங்களை தெரிவிப்பது இல்லை. இதனிடையில் சீனா தன் அணுஆயுதக் கையிருப்பு விரிவாக்கத்தின் நடுவே இருக்கிறது. சீன நாட்டில் 300-க்கும் அதிகமான புது ஏவுகணைக் குழிகள் கட்டப்படுவதை செயற்கைக்கோள் படங்கள் குறிப்பிடுகிறது. ஜனவரி 2021 மற்றும் 2022-ல் சீனா 350 அணு ஆயுதங்களைக் கொண்டிருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்களது அணுஆயுத பலத்தை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் தங்களது ஆயுதஅளவு பற்றிய தகவல்களை தெரிவிப்பதில்லை. வட கொரியா தன் ராணுவரீதியான அணுஆயுத கட்டமைப்புக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது.

அணுஆயுதங்களை கண்காணிக்க மற்றும் அணுஆயுத பரவலை தடுக்க போதிய நடவடிக்கைகள் இல்லாதது கவலையளிப்பதாக இருக்கிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் அணுஆயுதம் கைஇருப்புகளை விரிவுபடுத்தி வருவதாக தெரிகிறது. ஜனவரி 2022 நிலவரப்படி இந்தியாவிடம் 160 அணுஆயுதங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் அணு சக்தி கையிருப்பு கடந்த ஜனவரி 2021 மற்றும் ஜனவரி 2022ல் 165 ஆக இருக்கிறது. இந்த எண்ணிக்கையானது மேலும் விரிவடைந்து வருவதாகத் தெரிகிறது. இருநாடுகளும் கடந்த 2021ல் புதுவகையான அணுசக்தி விநியோக முறையை அறிமுகப்படுத்தி தொடர்ந்து உருவாக்கி வருகிறது. அணுஆயுதங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை இந்தியா பகிர்ந்துகொள்ளவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாங்கள் நடத்திய சில ஏவுகணை சோதனைகள் பற்றி மட்டுமே அறிக்கை வெளியிடுகிறது. அணுஆயுதங்களின் நிலை மற்றும் அணுஆயுத நாடுகளின் திறன்கள் குறித்த நம்பகமான தகவல்கள் கிடைப்பது என்பது ஒவ்வொரு நாட்டை பொறுத்தும் கணிசமாக வேறுபடுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |