Categories
தேசிய செய்திகள்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்கில்…. கணக்கு தொடங்குவது எப்படி…? இதோ வாங்க பார்க்கலாம்…!!!

இந்தியாவில் தற்போது பண பரிவர்த்தனைகள் அனைத்துமே அதிகமான அளவில் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செல்போன் செயல்கள் மிகவும் பயன்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளன. அந்த வகையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் என்ற செயலியும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் இந்திய தபால் துறையின் சேவைகளை ஆன்லைன் மூலமாகவே பெற முடிகிறது. இதனை நிறைய பேர் பயன்படுத்தி வரும் நிலையில் இதில் கணக்கு தொடங்குவது எப்படி என்று சிலருக்கு தெரிவதில்லை. இதில் கணக்கு தொடங்குவது எப்படி? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் IndiaPos tPayment Bank செயலியை பதிவிறக்கம் செய்யவும். பின்னர் அதில்  “Open account” என்ற வசதியை கிளிக் செய்து, உங்களது பான் கார்டு நம்பரையும் ஆதார் கார்டு நம்பரையும் பதிவிட வேண்டும். இதனையடுத்து உங்களது மொபைல் நம்பருக்கு OTP  அனுப்பப்படும். அதைப் பதிவிட வேண்டும். பின்னர் உங்களுடைய கல்வித் தகுதி, முகவரி, நாமினி பெயர், தாயின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிடவும். அனைத்து விவரங்களையும் பதிவிட்ட பிறகு “Submit” கொடுத்தால் Account ஓப்பன் ஆகிவிடும்.

Categories

Tech |