இந்தியாவில் இன்றும் நாளையும் வால்நட்சத்திரம் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட வானத்தில் நடக்கும் அதிசயங்களை காணும்போதே அத்தனை அழகாக இருக்கும். அதனைக் காண மக்கள் மிகவும் ஆசைப்படுவார்கள். சரி இது வருடம் வருடம் நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம். இதை காண்பதற்கு நாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையிலேயே மிக அரிதாக பார்க்கக்கூடிய ஒரு காட்சி வால்நட்சத்திரம். இதுகுறித்து சிறுவயதிலிருந்தே நாம் கேள்விப்பட்டிருப்போம். வால்நட்சத்திரம் உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசி ஆகியவற்றின் அண்ட பனிப்பந்துகள் ஆகும். இதனை தற்போது இந்திய மக்கள் காணலாம் என நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியா முழுவதும் இன்றும், நாளையும் வால்நட்சத்திரம் தெரியும். நியோவைஸ் கோமேட் 2020 என பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரம் இன்று அதிகாலை மக்களுக்கு தொலை தூரத்தில் தெரிந்திருக்கும். நாளை சூரிய மறைவிற்குப் பிறகு வடமேற்கு அடிவானத்தில் இந்த வால் நட்சத்திரத்தை இந்திய மக்கள் பார்க்கலாம் என தெரிவித்துள்ளது. தற்போது இந்த வால்நட்சத்திரம் மிகத் தொலைவில் இருப்பதாகவும் வருகின்ற 22ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் எனவும் கூறப்பட்டுளன.
☄️Skywatchers in the Northern Hemisphere with clear skies have a chance to catch a glimpse of Comet C/2020 F3 (NEOWISE). See when and where to look: https://t.co/LTXEpR0LjZ
☄️What is a comet, anyway? What do they look like up close? https://t.co/iNjHoHG59K#cometNEOWISE pic.twitter.com/vRNMIYVJHB
— NASA Solar System (@NASASolarSystem) July 10, 2020