Categories
உலக செய்திகள்

“இந்தியா முக்கிய பங்காளியாக விளங்குகிறது”… அமெரிக்க கூட்டு படைகளின் துணை செய்தி தொடர்பாளர் பேச்சு…!!!!!

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் அமெரிக்க கூட்டு படைகளின் தலைவர் மார்க் மிலே இருவரும் தொலைபேசி வழியாக பேசியுள்ளனர். அப்போது பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சூழல் நிலவரங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இருதரப்பு ராணு உறவுகள் மற்றும் இயங்கு தன்மை போன்றவற்றை ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றியும் விவாதித்ததாக  அமெரிக்க கூட்டு படைகளின் துணை செய்தி தொடர்பாளர் ஜோசப் ஹால்ஸ்டட் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அமெரிக்காவும், இந்தியாவும் வலுவான ராணுவ உறவை பகிர்ந்து கொள்வதாக கூறிய அவர், சுதந்திரமான இந்த பிராந்தியத்தை பராமரிப்பதில் முக்கிய பிராந்திய தலைவராகவும், முக்கிய பங்காளியாகவும் இந்தியா விளங்குவதாக தெரிவித்துள்ளார். இந்திய எல்லைப் பகுதிகளில் சீன படைகள் அவ்வபோது தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதிகள் தொடர்பு கொண்டு பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories

Tech |