Categories
தேசிய செய்திகள்

இந்தியா முதலிடம் …. அப்ப மற்ற நாடுகள்?…. வெளியான அறிக்கை…!!!

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  உலகளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல், உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப் போட்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட பெரிய அளவில் பொருளாதார பாதிப்புக்கு ஆளானது.

இதையடுத்து இந்தியாவிலும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பல்வேறு துறைகளில் பலருக்கும் வேலையிழப்பை ஏற்படுத்தியது. மேலும் சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முடங்கிப்போனது. மேலும் ஒட்டுமொத்த பொருளாதார சுழற்சியும் நின்று போனது. அதன் பின், கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கிய பிறகு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டதால், இந்திய பொருளாதாரமானது மெல்ல மீளத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதார என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி ஜிடிபி வளர்ச்சி மதிப்பீடு அடிப்படையில், 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சியானது 8.2% இருக்குமாம். மேலும் இது சீனாவை விட இரு மடங்கு அதிகம். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியானது 3.7 %, பிரேசில் – 0.8% மெக்சிகோ – 2%, ஜெர்மனி- 2.1%, இத்தாலி-2.3%,பிரான்ஸ்-2.9%,பிரிட்டன்-3.7% மற்றும் கனடா 3.9 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |