ஜிடிபி எனப்படும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு நிதி ஆண்டில் 10.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் நடப்பு நிதியாண்டிற்கான நிதிக்கொள்கையை வெளியீடு இன்று காணொளி வாயிலாக உரையாற்றினார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது ஓரளவு மேம்பட்டு இருப்பதாக கூறினார். கொரோனா தொற்றால் கடந்த நிதியாண்டு நமது திறனையும், முயற்சிகளையும் சோதித்து பார்த்ததாக குறிப்பிட்டார்.
அதேவேளையில் நடப்பு நிதி ஆண்டில் புதிய பொருளாதார மேம்பாட்டிற்கான தளத்தை உருவாக்கி இருப்பதாகவும் கூறினார். நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஜிடிபி 10.5 விழுக்காடு வளர்ச்சியை எட்டும் என்றும், ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித மாற்றம் நான்கு விழுக்காடாக இருக்கும் என்று தெரிவித்தார். நாட்டின் இன்றைய பொருளாதாரம் முன்னோக்கிய வளர்ச்சி என்ற ஒரே திசையை நோக்கி பயணிப்பதாக சக்திகாந்த தாஸ் கூறினார்.