இந்தியா முழுவதிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான பள்ளிகள் தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.இதனை அடுத்து 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்துள்ளது. அதனால் 9 முதல் 11 ஆம் வகுப்புகளில் இறுதித் தேர்வுகளை கொரோனா பாதிப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் தெரிவித்துள்ளது.