Categories
உலக செய்திகள் கொரோனா

இந்தியா முழுவதும் கொரோனா தரவு குளறுபடி – ஆய்வில் அதிர்ச்சி தகவல் ..!!

இந்தியாவில் கொரோனா தொற்று தரவுகளை கணக்கிடுவதில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்றுவரை கொரோனாபாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம்  13 லட்சத்து 85 ஆயிரத்து 522 ஆக உள்ளது. 3,66,368  பாதிப்பை கொண்டுள்ள மராட்டிய மாநிலம், தொடர்ச்சியாக கொரோனா தொற்றில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. 1 லட்சத்து 29 ஆயிரத்து 531பாதிப்பு உள்ள டெல்லி மூன்றாமிடத்தில் நீடிக்கிறது.

4-ம் இடத்தில் கர்நாடகம் (90 ஆயிரத்து 942), 5-ம் இடத்தில் ஆந்திரா (88 ஆயிரத்து 671), 6-ம் இடத்தில் உத்தரபிரதேசம் (63 ஆயிரத்து 742), 7-ம் இடத்தில் மேற்கு வங்காளம் (56 ஆயிரத்து 377), 8-ம் இடத்தில் குஜராத் (54 ஆயிரத்து 626), 9-ம் இடத்தில் தெலுங்கானா (52 ஆயிரத்து 466), 10-ம் இடத்தில் ராஜஸ்தான் (35 ஆயிரத்து 298) உள்ளது. 36,604, அசாமில் 30,186, அரியானாவில் 30,538, மத்திய பிரதேசத்தில் 26,926, ஒடிசாவில் 24,013, கேரளாவில் 18,098, ஜம்மு காஷ்மீரில் 17,305, பஞ்சாப்பில் 12,684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜார்கண்டில் 7,836, சத்தீஷ்காரில் 7,087, உத்தரகாண்டில் 5,445 கோவாவில் 4,686, திரிபுராவில் 3,862, புதுச்சேரியில் 2,654, மணிப்பூரில் 2,176, இமாசலபிரதேசத்தில் 2,049, நாகலாந்தில் 1,289, லடாக்கில் 1,276, அருணாசலபிரதேசத்தில் 1,126, சண்டிகாரில் 852, தத்ராநகர் ஹவேலி, தாமன், தையுவில் 860, மேகாலயாவில் 646, சிக்கிமில் 499, மிசோரமில் 361, அந்தமான் நிகோபாரில் 290, பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பற்றி அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர். ப்ரீ பிரிண்ட் களஞ்சியமான ‘மெட்ராக்ஸிவ்’ இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா முழுவதும் கொரோனா புள்ளிவிவர அறிக்கையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கொரோனா தொற்றின்  வெளிப்படை புள்ளிவிவர அறிக்கைகள் பொது சுகாதார முயற்சிகளுக்கு முக்கியமானவை.

அவ்வகையில் கர்நாடக மாநிலம் நல்ல கொரோனா தரவு அறிக்கையை கொண்டுள்ளது. பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மோசமான புள்ளிவிவரங்களை கொண்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த தரவு கட்டமைப்பானது பொது சுகாதார தரவு அறிக்கையின் 4 முக்கிய அம்சங்களைக் குறிக்கிறது. ஆராய்ச்சி குழு இந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி 29 மாநிலங்களுக்கு ‘கொரோனா தரவு அறிக்கையில் மதிப்பெண் அளித்துள்ளது (சி.டி.ஆர்.எஸ்., 0 முதல் 1 வரை) இரண்டு வார காலப்பகுதியில் மே 19 முதல் ஜூன் 1 வரை. அவர்கள் செய்த கொரோனா தரவு அறிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.

இகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:- “இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட கொரோனா தரவு அறிக்கையின் தரம் குறித்த விரிவான மதிப்பீட்டை நாங்கள் முன்வைத்துள்ளோம். இந்த மதிப்பீடு இந்தியாவில் பொது சுகாதார நடவடிக்கை முயற்சிகளைத் தெரிவிக்கிறது மற்றும் பிற அரசாங்கங்களால் தொற்றுநோய் தரவு அறிக்கை தயாரிப்பு  வழிகாட்டியாக செயல்படுகிறது. எங்கள் முடிவுகள் இந்தியாவில் மாநில அரசுகளால் செய்யப்பட்டுள்ள கொரோனா  தரவு அறிக்கையின் தரத்தில் வலுவான ஏற்றத்தாழ்வு இருப்பதை காட்டுகின்றன.

கொரோனா தரவு அறிக்கையில் மதிப்பெண் கர்நாடகாவில் 0.61 எனவும் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் 0.0 எனவும் வேறுபடுகின்றன, இதன் சராசரி மதிப்பு 0.26 ஆகும். கூடுதலாக, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகியவை தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடிந்த தகவல்களை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிட்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் தனியுரிமையை சமரசம் செய்து வருகின்றன.

கொரோனா தரவுகளின் அடிப்படையில் பிரதிநிதித்துவத்தை பத்து மாநிலங்கள் மட்டுமே முறையாக வழங்குகின்றன. மற்ற 10 மாநிலங்கள் வயது, பாலினம், நாள்பட்ட நோய் உள்ளவர்கள் அல்லது மாவட்டங்களால் வகைப்படுத்தப்பட்ட எந்த தரவையும் முறையாக தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |