திரையரங்குகளில் கூடுதல் பார்வையாளர்களை அனுமதிக்க வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.
50 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்களுக்கு அனுமதி என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நாடுதழுவிய குறைவான பரல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பிப்ரவரி 28 வரை நீட்டித்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. பொது இடங்களில் கூடுவது, விளையாட்டு திடல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீச்சல் குளங்கள் ஆகியவற்றுக்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருக்கு அனுமதி அளிக்கலாம் எனவும், பழைய விதிமுறைகளை நீக்கி தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி அதற்க்கு ஏற்றார் போல் இறுதி முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்ற ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் இதில் தெரிவித்து இருக்கிறது.