உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை குறைந்து வந்தது. அதனால் முக்கிய வழித்தட ரயில் பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டதால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தபோது மீண்டும் முழுவதுமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலின் காரணமாக முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது பயணிகளின் வசதிக்காக முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் விரைவில் முழுவதுமாக முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் கட்டணம் குறித்து அமைச்சர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை ஐஐடி மாணவர்கள் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து மாற்றத்திற்காக ஹைப்பர் திட்டத்தை வடிவமைத்து உள்ளனர். இதனை பார்வையிட மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வந்திருந்தார். அப்போது பேசிய அவர், ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை. பல ஆண்டுகளாக ரயில் கட்டணம் ஒரே நிலையில் உள்ளது. அதனால் சீனியர் சிட்டிசனுக்கு வழங்கப்பட்டு வந்த 50% கட்டண சலுகை இனி தொடர வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் ரயில் தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு யானைகள் செல்வதற்கு சுரங்கப் பாதைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.