இந்திய பொம்மை கண்காட்சியில் பொம்மைகளை வடிவமைப்பதற்கான போட்டிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
உலக அளவில் பொம்மை உற்பத்தியில் இந்தியா தனித்து விளங்குகிறது. அதனை மற்ற நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்திய பொம்மை கண்காட்சி 2021 கண்காட்சியை நடத்துகிறது. அந்த பொம்மை கண்காட்சியை பிப்ரவரி 27ஆம் தேதி முதல் 2 மார்ச் 2021 ஆம் வரை கண்டு மகிழலாம்.
அதன்படி இந்திய பொம்மை கண்காட்சியையொட்டி புதுமை பொம்மைகளை வடிவமைப்பதற்கான போட்டிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். போட்டியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொம்மை துறையை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்கலாம். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.