இந்தியாவில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 33 ஆயிரம் டன் கொரோனா கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஏழு மாதங்களில் 33 ஆயிரம் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அளித்த தகவலின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மாஸ்க், கையுறை, சிரஞ், காட்டன் என பல பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் கழிவுகள் தற்போது கணக்கிடப்பட்டுள்ளது.