Categories
உலக செய்திகள்

இந்தியா-ரஷ்யா கூட்டணி… தயாராகும் ஏ.கே.47 203 ரக துப்பாக்கி…!!!

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்க முடிவு செய்துள்ளன.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து ஏகே 47 டிரைவர் துப்பாக்கிகளின் தற்போதைய அதிநவீன வடிவமான ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இந்திய ராணுவத்திற்கு 7,70,000 துப்பாக்கிகள் தேவைப்படுவதால் அவற்றில் ஒரு லட்சம் துப்பாக்கிகள் இறக்குமதி செய்யப்படும். மீதமுள்ள துப்பாக்கிகள் உத்திரப் பிரதேசத்தில் இருக்கின்ற கொர்வா ஆயுத உற்பத்தி தொழிற்சாலையில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |