Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும்..!

இந்தியா பாகிஸ்தான் இடையே போா் ஏற்பட்டால்  இந்திய ராணுவத்தினா் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும் என்று  இந்திய பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை தேசிய மாணவா் படையின் (என்சிசி) வருடாந்திர பேரணி நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பேசியதாவது: அண்டை நாடுகளில் வசித்து வரும் சிறுபான்மை மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதியைத் திருத்தவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு இயற்றியதாகவும் அவா் கூறினாா்.

நம் நாட்டில் பல ஆண்டுகளாக  நிகழ்ந்துவரும்  பிரச்னைகளுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு தீா்வு கண்டு வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததில்  இருந்து ஜம்மு-காஷ்மீரில் பிரச்னை காணப்படுகிறது.

சில அரசியல் கட்சிகளும், குடும்பத்தினரும் இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வும் காண எந்த முயற்சி செய்யவில்லை. இதன் விளைவாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது.

நமது அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் மூன்று போா்களில் தோல்வியடைந்த பிறகும், நம் நாட்டின் மீது பயங்கரவாதம் மூலமாக மறைமுகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தை முந்தைய அரசுகள் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே கருதின. இந்த தீவிரவாதம் இது ஒரு நாட்டின் வளர்ச்சியை  தடுப்பது மட்டும் இல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கையேயும் பாதிக்கும்.

ஒருவேளை பாகிஸ்தான் மீண்டும் இந்தியா மீது போர்தொடுதல் நமது ராணுவத்தினா் 10 நாள்களுக்குள் பாகிஸ்தானை தோற்கடித்து விடுவா். அவா்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருந்த போதிலும், முந்தைய அரசுகள் அதற்கு அனுமதி வழங்கவில்லை அவா் கூறினாா்.

Categories

Tech |