நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்திருக்கின்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான வர்த்தகம் இணைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் பற்றி பேச்சுவார்த்தை மேற்கொள்ள இருக்கின்றார். அவரது இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ரயில்வே அறிவியல் விண்வெளி மற்றும் ஊடக ஒத்துழைப்பு போன்றவற்றில் பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதன்படி இந்தியா, வங்காளதேசம் இடையேயான ரயில்வே ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றது. வங்கதேசத்தின் ரயில்வே ஊழியர்களுக்கு இந்திய ரயில்வேயின் பயிற்சி மையங்களில் பயிற்சி அளிப்பது மற்றும் வங்காளதேச ரயில்வே துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை ஒருங்கிணைப்பது ஆகிய இரண்டு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Categories