மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பலரும் வெள்ளி, தங்கம், வெண்கலம் போன்ற பதக்கங்களை பெற்று வருகின்றன. 6-வது நாளான நேற்று வட்டு எறிதல் போட்டியில் வீரர் வினோத்குமார் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.
இந்நிலையில் F-52 பிரிவில், வட்டு எறிதல் போட்டியில் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்ற தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதியற்றவர் என தொழில்நுட்ப குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் அவரது வெண்கலப்பதக்கம் திரும்பப் பெறப்பட்டது.