Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்தியா-75…. “போர் நினைவிடத்திலிருந்து 75 கி.மீ சைக்கிள் பேரணி”… தொடங்கி வைத்த டிஜிபி சைலேந்திரபாபு..!!

சென்னையில்  நேற்று  இந்தியா -75   நினைவு கூறும்  விதமாக  சைக்கிள் பேரணி  நடைபெற்றது. 

சென்னையை தலைமையிடமாக கொண்டு  இந்திய ராணுவத்தின் தட்சின் பாரத் ஏரியா  செயல்பட்டு  வருகிறது.  இந்த  தட்சின் பாரத் ஏரியா சார்பில், இந்தியாவின்  75 ஆண்டு கால சுதந்திர (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக   சென்னையில்  நேற்று   சைக்கிள் பேரணி  நடைபெற்றது.   ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள், காவல்துறையினர்,    ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்  உட்பட  75 பேர்  கலந்து கொண்ட  இந்த   சைக்கிள் பேரணி   75  கிலோமீட்டர்   தூரத்திற்கு  நடந்தது.

இந்த  நிகழ்ச்சியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல், ஏ.அருண்  இந்த நிகழ்ச்சிக்கு  தலைமை தாங்கினார்.  சென்னை  காமராஜர் சாலையில்  இருக்கும்  போர்  நினைவகத்தில்  தொடங்கிய   இந்த சைக்கிள் பேரணி காமராஜர் சாலை, அடையாறு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பழைய மாமல்லபுரம் சாலை வழியாக முட்டுக்காடு சென்று, பின்பு  போர் நினைவிடத்தில் நிறைவுற்றது.

 

Categories

Tech |