Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா Vs ஆஸ்திரேலியா…. நாளை பலபரீட்சை…. வெல்லப் போவது யார்….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

கேப்டன் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகின்றனர். மெகாலியில் நடந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டியில்  ஆஸ்திரேலிய அணியினர் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒருவேளை தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும்.

மெகாலில் நடைபெற்ற போட்டியில் 208 ரன்கள் எடுத்ததும் இந்திய அணியினர் தோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால் ரன்கள் எடுத்தும் பலன் இல்லாமல் போனது. இதன் காரணமாக நாளை நடைபெறும் போட்டியில் பந்துவீச்சாளர்கள் மாற்றப்படுவார்கள். மெகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் உமேஷ் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், யுசுவேந்திர சாஹல், ஹர்சேல் படேல், புவனேஷ் குமார் ஆகியோர் ரன்களை வாரி இறைத்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்கள்.

இந்திய அணியின் முதுகெலும்பாக விளங்கும் பும்ரா முழு உடல் தகுதியுடன் இல்லாதது பந்து வீச்சில் பலவீனத்தை காட்டுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் கடந்த மேட்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தாமல் சொதப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் ரோகித் சர்மா மீண்டும் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து நீக்கப்பட்டால் ரிஷப் பண்ட் விளையாடுவார். மேலும் இந்திய அணியினர் நாளை நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்பதால் ரசிகர்களுக்கு நாளை நடைபெறும் போட்டியின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

Categories

Tech |