Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து…. ஒரு நாள் தொடரில் இந்திய பவுலர்கள் சாதனை..!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 1 நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதோடு இங்கிலாந்து அணியின் 1 நாள் மேட்சின் மொத்த விக்கெட்டுகளையும் இந்திய பந்துவீச்சாளர்களே சாய்த்தனர். இதேப்போன்று மொத்த விக்கெட்டுகளையும் பந்துவீச்சாளர்கள் முழுமையாக சாய்த்தது 7-வது முறை நடந்துள்ளது. இந்த மேட்சில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் 151 ஆக விக்கெட் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் 150 விக்கெட்டுகளை அதிவேகமாக எடுத்த இந்தியர் என்ற பெருமையை முகமது ஷிமி பெற்றுள்ளார்.

இதனையடுத்து சர்வதேச அளவில் ஆப்கானிஸ்தான் வீரர் ரக்ஷித் காணுடன் 3-வது இடத்தில் முகமது ஷமி இருக்கிறார். இதுவரை இன்னிங்ஸில் 6 விக்கெட்களை 10 இந்தியர்கள் 1 நாள் தொடரில் வீழ்த்தியுள்ளனர். இதில் சிறந்த பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேப்போன்று ஆஷிஷ் நெஹெரா 6-59, ஸ்ரீசாந்த் 6-55, அமித் மிஸ்ரா ‌6-48, யுஸ்வேந்திர சாகல் 6-42, அஜித் அகர்கர் 6-43, முரளி கார்த்திக் 6-27, குல்தீப் யாதவ் 6-25, ஆஷிஷ் நெஹரா 6-23, பும்ரா 6-19, கும்ப்ளே 6-12 ஆகியோரும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களாவர். மேலும் 2-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

Categories

Tech |