Categories
விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா: இவர்களுக்கு 50 சதவீத கட்டணம் திருப்பி தரப்படும்…. முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியானது மழையால்  ரத்து செய்யப்பட்டது. அதாவது இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி பெங்களூருவிலுள்ள சின்னச்சாமி மைதானத்தில் துவங்க இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டித் தொடங்க தாமதமானது. இதையடுத்து டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் போன்றோர் களமிறங்கினர்.

அதனை தொடர்ந்து இந்திய அணி 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை  எடுத்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பிறகு இறுதியில் மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக 5 போட்டிகள் உடைய டி20 தொடரில் 2-2 என்ற கணக்கில் தொடர்சமனில் முடிந்தது. இந்நிலையில் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் பார்வையாளர்களுக்கு 50 சதவீத டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படும் என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ஆகவே அசல் டிக்கெட்டை கொண்டுவந்து 50 சதவீத பணத்தை பார்வையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |