இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் செயல்படுகிறார். டி20 தொடர் இன்று தொடங்கி நவம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பின் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் 25ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் உள்ள ஸ்கை மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்ததன் காரணமாக 12 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி டாஸ்போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.