Categories
மாநில செய்திகள்

இந்தியில் கடிதமா….? மொழி சட்டத்திற்கு புறம்பானது…. கண்டனம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்…!!

 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய கலாச்சார அமைச்சகம் இந்தியில் கடிதம் அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கலாச்சார அமைச்சகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் “மத்திய கலாச்சார அமைச்சகத்தில் இருந்து வந்த கடிதத்தில் உள்ள செய்தி என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தக் கடிதத்தோடு இணைக்கப்பட்ட ஆங்கில கடிதத்தின் மூலம் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள செய்தி என்ன என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள செய்தி காந்தி சமாதான  விருதுக்கான பரிந்துரைகளை நாடாளுமன்ற  உறுப்பினர்களிடம் கேட்கிற கடிதம் ஆகும்.தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தொடர்புகள் வேறு மொழியில் அமையக் கூடாது என்றும் அவ்வாறு அமைவது மொழி சட்டத்திற்கும் புறம்பானது என்பதை மீண்டும் பதிவு செய்துகொள்கிறேன்”இப்பிரச்சினையை  மதுரை உயர்நீதி மன்றத்தின் மூலம் வழக்குப்பதிவு செய்து  அந்த வழக்கில் மத்திய அரசு வருத்தத்தை தெரிவித்து கொண்டது. மேலும் இனி தகவல் தொடர்புகள் ஆங்கிலத்தில் அமையும் என்ற உறுதிமொழியை அளித்தது.

Categories

Tech |