கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். அறிமுக இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் நடிகை யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘வலிமை’ பட தயாரிப்பாளரின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது . தமிழில் இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது போலவே இந்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.