Categories
மாநில செய்திகள்

இந்தியை கட்டாயமாக்கணும்…! இந்துக்களே ஓட்டு போடுங்க…. பரபரப்பை கிளப்பிய கட்சி தலைவர் …!!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நேற்று நாகர்கோவிலில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசிய இந்து மகா சபா நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். பொது சிவில் சட்டங்களை கொண்டு வரவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.

மேலும் பாஜகவில் அதிக இந்துக்கள் இருக்கிறார்கள். பாஜக இந்துக்களின் கட்சி அல்ல. காங்கிரஸ் கட்சியின் கார்பன் காப்பி தான் பாஜக. இந்துக்கள் அனைவரும் இந்து மகா சபாவிற்கு வாக்களிக்க வேண்டும். அதிமுக – திமுக தேர்தல் அறிக்கையில் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி அவமானப்படுத்துகிறார்கள். இந்த இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கை காமெடி கூத்தாக பார்க்கப் படுகிறது என தெரிவித்தார்.

Categories

Tech |