இந்திய அணியினர் வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 1 நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கின்றனர். இந்த தொடரில் முகமது ஷமி, ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்த்திக் பாண்ட்யா, விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விராட் கோலி 20 ஓவர் தொடரிலும் ஓய்வு அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைப்போன்று இங்கிலாந்து அணியுடன் மோதிய போதும் மூத்த வீரர்களுக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்படி மூத்த வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும் போது ஓய்வு எடுப்பது அதிருப்தியை ஏற்படுத்துவதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதாவது மூத்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வு எடுக்காமல், இந்திய அணிக்காக விளையாடும் போது ஓய்வு எடுப்பது எதற்காக என கேள்வி எழுப்பியுள்ளார். அதன்பிறகு 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர் எடுத்தால் மட்டுமே போதுமானது. இதனால் உங்கள் உடம்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஓய்வு என்பது சாதாரணமானதாக விட்டது என்றும், கிரிக்கெட் வாரியம் மூத்த வீரர்களின் ஓய்வில் தலையிட வேண்டும் எனவும், ஏ கிரேட் வீரர்கள் ஒவ்வொரு தொடரிலும் சிறந்த ஒப்பந்தங்கள் பெற்று ஒவ்வொரு தொடருக்கும் பணம் பெறுகின்றனர் எனவும், ஓய்வு பெற விரும்புவர்கள் உத்திரவாதங்களை குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்திய அணிக்காக ஒருவர் எப்படி விளையாட முடியாது என்று கூற முடியும் எனவும் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.