Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்திய அணிக்கு கோலி ரொம்ப முக்கியம் ‘ ….! ரோகித் சர்மா ஓபன் டாக் ….!!!

ஒரு பேட்ஸ்மேனாக  விராட் கோலியின் திறமை அணிக்கு மிக முக்கியமானதாகும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார் .

இந்திய அணியின் டி20  கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை தொடர்ந்து அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார் .இந்நிலையில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலி நீக்கப்பட்ட நிலையில்  ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் .இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில்,” டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என  விராட் கோலி இடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார் .அதே சமயம் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டுக்கு தனித்தனி கேப்டன் நியமிப்பது ஒத்து வராது என்பதால் ஒருநாள் அணியின்  கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்” என்று அவர் கூறியுள்ளார் .இந்நிலையில் புதிய கேப்டனான ரோகித் சர்மா கூறும்போது,” அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்த விரும்புகிறேன் .ஏனெனில் 10 ரன்னுக்குள் 3 விக்கெட் இழக்கும் போது அந்த சூழ்நிலையில் எப்படி ஆட வேண்டும் என்பதற்கு தயார் படுத்த விரும்புகிறேன்.

அதோடு அணி தொடக்கத்தில் தடுமாறும் சமயத்தில்  3, 4, 5, 6 ஆகிய வரிசையில் பேட்டிங் செய்யும் வீரர்கள் அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆட வேண்டும் என நான் விரும்புகிறேன் .அடுத்து நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்பு சில போட்டிகள் உள்ளது .அதை சோதித்து பார்க்க வேண்டும் .மேலும் 10 ரன்னுக்கு 2 விக்கெட்இழந்த  பிறகு வீரர் ஒருவர் என்ன ஷாட் விளையாடுகிறார் என மக்கள் நினைப்பதை நான் விரும்பவில்லை .அதோடு வர்ணனையாளர்கள் இந்திய மக்கள் இது அணியின் திட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .ஒரு கேப்டன் விளையாடும் போது முன்னணியில் நிற்க வேண்டும். மற்ற எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்க வேண்டும் . கேப்டன் பின்னால் நிற்பதன் மூலமாக  மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஏனெனில் அவர் அனைவரையும் சுற்றி இருப்பதை உறுதி செய்ய முடியும் .அதேபோல் ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலியின் திறமை  அணிக்கு மிக முக்கியமானதாகும் .அவர்  இன்னும் அணியின் தலைவர் தான் .இதனால் விராட் கோலி அணியில் இருப்பது மிக முக்கியமானது “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |