சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்..
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி களமிறங்கி இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாண்டியா 63 ரன்களும், விராட் கோலி 50 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடியால் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் விராட் கோலி அரைசதம் அடித்து ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது இந்த டி20 கிரிக்கெட் தொடரில் 4 அரை சதம் அவர் விளாசியதன் மூலம் 4,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார். அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஆகியோர் உள்ளனர்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் :
விராட் கோலி (இந்தியா) – 4,008 ரன்கள்
ரோஹித் சர்மா (இந்தியா) – 3,853 ரன்கள்
மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) – 3,531 ரன்கள்
பாபர் அசாம் (பாகிஸ்தான்) – 3,323 ரன்கள்
ஸ்டெர்லிங் (அயர்லாந்து) – 3,181 ரன்கள்