இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் ஜூன் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான், பாண்டியா இருவரில் ஒருவர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடந்து வரும் 15வது ஐபிஎல் சீசன் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருவதால் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
Categories