Categories
உலக செய்திகள்

இந்திய அமெரிக்க சிறுமி…. 5 வயதில் இப்படி ஒரு திறமையா….? கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெயர்….!!

இந்திய அமெரிக்க சிறுமி புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க சிறுமி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் கியாரா கவுர்(5) என்ற சிறுமி புத்தகம் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளார். அந்த ஆர்வமே இப்போது உலக சாதனை படைக்க காரணமானது. கடந்த பிப்ரவரி 13ம் தேதி 36 புத்தகங்களை 105 நிமிடங்களில் படித்ததால் உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசிய சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். கியாராவை உலகசாதனை புத்தகம் ‘அதிசய குழந்தை’ என்றும் மிகச்சிறிய வயது  நூலகர் எனவும் பாராட்டியுள்ளது.

கியாரா ஓய்வுநேரத்தில் புத்தகம் வாசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் பள்ளி நூலகத்திலும் அவர் தீவிரமாக படிப்பார் என்றும் அவரது ஆசிரியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கியாரா கூறுகையில் படங்கள் இருக்கும் புத்தகம் மற்றும் பெரிய புத்தகங்களை படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் சின்ட்ரெட்ரெல்லா,லிட்டில் ரெட் ரைடிங் ஹுட் போன்றவை தனக்கு மிகவும் பிடித்த நூல்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே அவரது தாயார் அவருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் அவரது தாத்தா மூலம் வந்தது என்றும் அவர் வருங்காலத்தில் ஒரு டாக்டராக ஆக வேண்டும் என்பதே கனவு எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |