Categories
மாநில செய்திகள்

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாடு…. சென்னை வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

சார்ஜாவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் ( 41 ) என்பவருடைய பாஸ்போர்ட் சோதிக்கப்பட்டது.

அப்போது, அவர் ஏமன் நாட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் தமிழகத்திற்கு வந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது. அதாவது முருகன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். அதன் பிறகு அங்கிருந்து ஏமன் நாட்டிற்குச் சென்றுவிட்டு பின்னர் சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். இந்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டில் ஏமன், லிபியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல தடை விதித்தது.

மேலும் அந்த நாடுகளுக்கு சென்று வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் ஏமன் நாட்டிற்கு சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பி வந்த முருகனை குடியுரிமை அதிகாரிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் முருகன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |