உக்ரேன் அதிபர் இந்திய பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஐ.நா பாதுகாப்பு சபையில் தங்கள் நாட்டிற்கு ஆதரவு தெளிவிக்கும் விதமான அரசியல் நிலைபாட்டை எடுக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் தொடர்ந்து 3 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடையும் நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்திய பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது ஐ.நா பாதுகாப்பு சபையில் தங்கள் நாட்டிற்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களை ஒன்றிணைந்து நிறுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.