Categories
தேசிய செய்திகள்

“இந்திய அளவில் 2 வது இடத்தை பிடித்த திருப்பதி”…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இங்கு தரிசன டிக்கெட், காணிக்கை, லட்டு விற்பனை என வருடத்திற்கு கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு சிறப்புகளை கொண்ட திருப்பதி கோவில், இந்திய அளவில் அதிகம் பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மீக தலங்களில் 2வது இடத்தை பிடித்திருக்கிறது.

இப்பட்டியல் ஓயோ கலாச்சார பயண அறிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் படி, வாரணாசி முதல் இடத்தையும், திருப்பதி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2021-ம் வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்களின் எண்ணிக்கையானது குறைந்தது. நடப்பு ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அத்துடன் திருப்பதி தரிசன முன்பதிவு சென்ற ஆண்டை விட 233% அதிகரித்து இருக்கிறது.

Categories

Tech |