யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் அக்பர் அலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் 88 ரன் குவிக்க ஏனைய வீரர்கள் வங்கதேச அணியினரின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் விக்கெட் சீட்டு கட்டாய் சரிந்தது. முடிவில் இந்திய அணி 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வங்கதேச அணி சார்பில் அவிஷேக் டாஸ் 3 விக்கெட்டை வீழ்த்தினார். 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேச அணி ஆட இருக்கின்றது.