எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சீனா பாலம் கட்டி வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்திய சீன எல்லைப் பகுதியான லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் குறுக்கே சீன ராணுவத்தினர் பாலம் கட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு பார்லிமென்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது, அதில் கூறியிருப்பதாவது, சீன ராணுவத்தினர் லடாக்கின் பாங்காங் சோ ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி வருவதை மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது.
இந்திய எல்லை பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சீனா இந்த பாலத்தை கட்டி வருகிறது. ஜம்மு-காஷ்மீர், லடாக் போன்றவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என மத்திய அரசு பலமுறை கூறிவிட்டது. ஆனால் சில நாடுகள் இந்தியாவின் இறையாண்மையை மதிக்காமல் இதுபோல சில காரியங்கள் செய்து வருகின்றனர் . கடந்த 60 ஆண்டுகளாக 37 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.