லடாக்கின் எல்லையை தாண்டி இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயற்சி செய்த சீன வீரர் ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் பிடித்துள்ளனர்.
இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியான லடாக் அருகே உள்ள சுமர்-டெம்சோக் என்ற பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்து பணியில் இருந்தபோது, இந்திய பகுதிக்குள் சீன வீரர் ஒருவர் நுழைய முயற்சி செய்துள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்த இந்திய ராணுவ வீரர்கள், அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நபர் தனது கவனக்குறைவால் எல்லைப் பகுதியில் நுழைந்து இருக்கலாம் என்றும், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு, அதன் பிறகு அவர் சீன ராணுவத்திடம் ஒப்படைக்க படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.