Categories
உலக செய்திகள்

இந்திய எல்லையில்… படையெடுக்கும் சீனப் படைகள்… மைக் பாம்பியோ அளித்த தகவல்… எல்லையில் பரபரப்பு…!!!

இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் சீனா தரப்பில் 60,000 படையினரை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.அதேசமயத்தில் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக மாஸ்கோவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் அமைதியை ஏற்படுத்துவது ஐந்து அம்ச திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.அந்தத் திட்டத்தை விரைவில் அமல்படுத்த குறித்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியில் சீனா தரப்பில் 60,000 படையினரை நிறுத்தி வைத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாபியோ கூறியுள்ளார். அதுமட்டுமன்றி சீனாவின் இத்தகைய நடவடிக்கை மிக மோசமான நடத்தை என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

 

Categories

Tech |