இந்திய கடற்படையில் பைலட், பொது சேவை மற்றும் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 217 காலி பணியிடங்கள் உள்ளது.அதில் அதிகபட்சமாக பொது சேவை பிரிவில் 56 இடங்கள், எலக்ட்ரிக்கல் பிரிவில் 45, இன்ஜினியரிங் மற்றும் பயலட் பிரிவில் 25, போக்குவரத்து பிரிவில் 20, கடற்படை விமான இயக்க அதிகாரி பிரிவில் 15, கல்வி பிரிவில் 12 என மொத்தம் 217 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அதற்கு www.jionindiannavy.gov.inஎன்ற இணையதளத்தில் நவம்பர் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.