திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மார்ச் 12 உடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைய உள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள கட்சியினர் அனைவரும் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல புதிய கட்சிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறது. அதிமுக திமுக என்று பல முன்னணி காட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் எந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிமுகவினர் பாஜக மற்றும் பாமக உடன் கூட்டணியில் ஈடுபட்டுள்ளன. இதைத் தொடர்ந்து திமுகவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தற்போது நடைபெற்றுள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 10 தொகுதிகள், இந்திய காங்கிரஸ் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்ணா அறிவாலயத்தில் இன்று ஒப்பந்தமானது கையெழுத்தானது.