சிவகிரி அரசு மருத்துவமனையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சிவகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 200 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. டாக்டர் இசக்கி தலைமை தாங்கிய இந்த விழாவில் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிவகிரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், ஏ.ஐ.டி.யு.சி வேல்முருகன், மாதர் சங்க நிர்வாகி சண்முகவடிவு, கவுன்சிலர் அருணாச்சலம், நிர்வாகக்குழு ராஜகோபால், மாடசாமி, குருசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.