Categories
தேசிய செய்திகள்

“இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்”… பிபா அறிவிப்பு…!!!!!!

பதவி காலம் முடிந்த பின்னரும் புதிய தலைவருக்கான தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ப்ரபுல் படேலை சுப்ரீம் கோர்ட் நீக்கம் செய்துள்ளது. அவர் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவையும் முழுமையாக கலைத்துள்ளது. இந்த நிலையில் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த சுப்ரீம் கோர்ட் புதிதாக தேர்தலை நடத்த ஏதுவாக மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது. அதில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் வரை இந்த கமிட்டியை கால்பந்து கூட்டமைப்பின் அதிகாரப்பூர் அமைப்பாக செயல்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கமிட்டி தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது இதற்கு இடையே இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் நபர் தலையீடு இருப்பதாக கூறி அந்த உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா நீக்கி உள்ளது.

மேலும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்துவதற்கான உரிமைத்தையும் பிபா தற்காலிகமாக நீக்கி இருக்கின்றது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் இது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்க அமைக்கப்பட்ட குழுவை சுப்ரீம் கோர்ட் நீக்கி உள்ளது. மேலும் இந்திய கால்பந்து கூட்டமைப்புடன் நிர்வாகத்தை ஒப்படைத்துள்ளது. இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி கால்பந்து கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் விதமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அதிகாரி உமேஷ் கூறியுள்ளார். இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட் அமைத்த நிர்வாகத்தை குழு கலைக்கப்பட்டதனை அடுத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை பிபா நீக்கி உள்ளது.

மூன்றாம் நம்பர் தலையீடு நீங்கியதையடுத்து கால்பந்து கூட்டமைப்பின் தடை நீக்கப்படுவதாக பிபா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியா நடத்தப்பட இருக்கின்றது. மேலும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கால்பந்து கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது. 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் கால்பந்து போட்டிகள் வரும் அக்டோபர் பதினொன்றாம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை மும்பை, கோவா, புவனேஸ்வர் போன்ற மூன்று நகரங்களில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |