Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணிக்கு சத்குரு வாழ்த்து……!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இளம் இந்திய அணி வீரர்களுக்கு சத்குரு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். முன்னணி வீரர்கள் யாரும் இல்லாமல் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதம் பிரகாசமாக ஒளிர்கிறது! கிரிக்கெட் எனும் இனத்தை -மதம், இனம், சார்புகள் கடந்து இந்த தேசம் கொண்டாடட்டும். பாரத அணியே – அனைவரும் பெருமைப்படுகிறோம். வாழ்த்துகள் & ஆசிகள்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |