Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின்…. தவறவிட்ட சாதனைகள்…. இதோ சில தகவல்கள்….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக சச்சின் டெண்டுல்கர் திகழ்ந்தார். கடந்த 1989-ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி கிரிக்கெட்டில் 100 சதங்களை சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ளார். அதன் பிறகு 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 34,000 ரன்களை குவித்துள்ளார். அதன் பிறகு உலக கோப்பை கிரிக்கெட்டில் 2278 ரன்களை எடுத்து அதிக சதம் மற்றும் அரை சதம் அடித்துள்ளார். இது போன்ற பல சாதனைகளை   நிகழ்த்தி இருந்தாலும், அவரால் 3 சாதனைகளை படைக்க முடியவில்லை. அதாவது இந்தியாவுக்காக சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பல முறை விளையாடி இருந்தாலும், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்தான் உலகக்கோப்பை தொடர்களில் அதிக முறை விளையாடியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 46 முறை விளையாடியுள்ளார். இதனையடுத்து சச்சின் டெண்டுல்கர் அதிக பந்துகளை சந்திக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும். ஆனால் நட்சத்திர வீரரான திராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 31 ஆயிரத்து 258 பந்துகளை சந்தித்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக பந்துகளை சந்தித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதை தொடர்ந்து சச்சின் முச்சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைக்கவில்லை. இந்த முச்சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை வீரேந்திர சேவாக் மற்றும் கருண் நாயர் ஆகிய 2 பேரும் பெற்றுள்ளனர். மேலும் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Categories

Tech |