Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு – போடு செம மகிழ்ச்சி செய்தி…!!

டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக வாய்ப்பை இந்தியா தக்க வைத்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி காலை தொடங்கியது.இதில்  டாஸை வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இதையடுத்து இரண்டு அணிகளும் தொடர்ந்து விளையாடி வந்தனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக வாய்ப்பை இந்தியா தக்க வைத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரை 3-1 அல்லது 2-1 என வென்றால் இந்தியா  இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். இந்த முடிவுகள் கிடைக்காத நிலையில் ஆஸ்திரேலியா இறுதியில் போட்டியில் பங்கேற்கும்.

Categories

Tech |