Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்கு ரூ. 2 கோடி வழங்கிய பிசிசிஐ!

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி தொடங்கப்பட்ட இந்திய கிரிக்கெட் சங்கத்திற்கு முதல்முறையாக பிசிசிஐ ரூ. 2 கோடியை ஒதுக்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டியின் பரிந்துரைகள்படி இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் தொடங்கப்பட்டு, அதன் நிர்வாகிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சங்கத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் நிர்வாகிகள் தற்காலிக பட்ஜெட்டை தயாரித்து பிசிசிஐக்கு அனுப்பினர்.

இதனால் பிசிசிஐயிடமிருந்து முதல் தொகையாக ரூ. 5 கோடி வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் தொகையாக பிசிசிஐ ரூ. 2 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தை நிர்வகிப்பதற்கு சில ஆரம்ப கால தொகையை மட்டுமே பிசிசிஐ வழங்கும் எனவும், அதனை தொடர்ந்து நீண்ட காலத்திற்கு நடத்த சங்கத்தின் தேவையை சங்கமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம்

இந்த சங்கம் சர்வதேச கிரிக்கெட் சங்கத்துடன் இணைக்கப்படவில்லை. அதேபோல் மற்ற நாட்டு கிரிக்கெட் சங்கங்களைப் போல் அல்லாமல் முன்னாள் வீரர்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேரமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திய கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகளாக கபில் தேவ், அஜித் அகர்கர், சாந்தா ரங்கசாமி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |